மாநில கல்வி கொள்கை - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை
மாநில கல்வி கொள்கையை உருவாக்குவது குறித்து, முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது...
மாநில கல்வி கொள்கை - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை
மாநில கல்வி கொள்கையை உருவாக்குவது குறித்து, முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.
ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி முருகேசன் தலைமையில் மாநில கல்வி கொள்கையை உருவாக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை ஏற்க முடியாது என்றும், தமிழகத்திற்கென தனியாக மாநில கல்வி கொள்கை உருவாக்கப்படும் என்றும் முதல்வர் அறிவித்ததை தொடர்ந்து, இந்த குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவின் முதல் ஆலோசனை கூட்டம் இன்று தலைமைச் செயலகத்தில் நடைபெறுகிறது. முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில், குழுவின் தலைவர் நீதிபதி முருகேசன் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொள்கின்றனர்.
மேலும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மற்றும் உயர் அதிகாரிகளும் பங்கேற்கின்றனர். கூட்டத்தில், மாநில கல்வி கொள்கையை வடிவமைப்பது குறித்து, குழுவினரோடு முதல்வர் விரிவாக ஆலோசனை நடத்த உள்ளார்.