சட்டம் ஒழுங்கு தொடர்பாக, சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை

Update: 2023-01-19 06:10 GMT

Full View


சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் சட்டம் ஒழுங்கு தொடர்பான ஆலோசனை கூட்டம் தொடங்கியது


தமிழ்நாட்டில் நிலவும் சட்ட முழங்கு சூழ்நிலைகள் குறித்தும் குற்ற வழக்குகளில் எடுக்கப்பட்டிருக்க கூடிய நடவடிக்கைகள் குறித்தும் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாகவும் ஆலோசனை மேற்கொள்ளப்படுகிறது.

கூட்டத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளை கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், கொலை கொள்ளை வழக்குகளில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை.


இணைய வழி குற்ற சம்பவங்களை தடுப்பதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் காவல்துறை அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்குகிறார்.

முதலமைச்சர் தலைமையில் நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டத்தில், தலைமைச் செயலாளர் இறையன்பு, உள்துறை செயலாளர் பணீந்தர ரெட்டி, டிஜிபி சைலேந்திரபாபு, உளவுத்துறை ஏடிஜிபி டேவிட்சன் தேவசீர்வாதம், மாநகர காவல் ஆணையர்கள் பங்கேற்றுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்