மலையாள நகைச்சுவை நடிகர் இன்னசென்ட் காலமானார்

Update: 2023-03-27 02:22 GMT
    • புற்று நோயால் பாதிக்கப்பட்ட மலையாள நடிகர் இன்னசென்ட் காலமானார். அவருக்கு வயது 75.
  • மலையாள நகைச்சுவை நடிகரும், முன்னாள் எம்.பி.,யுமான இன்னசென்ட், புற்று நோய் பாதிப்பு காரணமாக, கொச்சியில் உள்ள தனியார் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டார்.
  • வெண்டிலேட்டர், எக்மோ கருவிகள் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படாமல் காலமானார்.
  • 1972ஆம் ஆண்டு 'நிருத்தாசலம் ' என்ற படத்தின் மூலம் வெள்ளித்திரைக்கு அறிமுகமான இன்னசென்ட், 750க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றார்.
  • மேலும், சாலக்குடி தொகுதி எம்பியாகவும் பதவி வகித்தார். இன்னசென்ட் மறைவுக்கு பல்வேறு திரைத்துறையினர், அரசியல் தலைவர்கள் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்