- மீண்டும் ஆட்குறைப்பு நடவடிக்கையை பேஸ்புக் நிறுவனம் கையில் எடுக்கவுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.
- மிக மோசமான பொருளாதார மந்தநிலையை சுட்டிக்காட்டி, டெக் நிறுவனங்கள் பலவும் தடாலடியாக தங்கள் ஊழியர்கள் பலரையும் வேலையை விட்டு தூக்கி, வீட்டிற்குஅனுப்பி வைத்து வருகின்றன.
- அந்த வரிசையில் கடந்த ஆண்டே அதிரடியாக 11 ஆயிரம் ஊழியர்களை வேலையை விட்டு தூக்கி அதிரடி காட்டியிருந்தது, பேஸ்புக் நிறுவனம். இந்நிலையில்,
- இந்த ஆண்டும் ஆட்குறைப்பு நடவடிக்கையை கையில் எடுக்க மெட்டா நிறுவனம் திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது.
- இதனால் தங்கள் நிறுவனத்தில் உள்ள பல அணிகளின் வரவுசெலவு திட்டத்தை மெட்டா நிறுவனம் தள்ளி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.