துபாய் பயணிகள் இனி செம்ம ஹாப்பி.. இன்னும் 3 ஆண்டுகள்தான்.... பறக்கும் டாக்ஸி... துபாய் அரசு அதிரடி
- பறக்கும் டேக்ஸிகளை அறிமுகப்படுத்த துபாய் அரசு திட்டமிட்டுள்ளது.
- உலகின் மிக உயர்ந்த கட்டிடத்தை கொண்டுள்ள துபாயில், பறக்கும் டாக்ஸிகளை அறிமுகப்படுத்த 2017 முதல் துபாய் அரசு முயற்சி செய்து வருகிறது.
- அமெரிக்காவின் கலிபோர்னியாவைச் சேர்ந்த ஜோபி ஏவியேசன் நிறுவனத்தின் பறக்கும் டேக்ஸியை 2026க்குள் அறிமுகப்படுத்த உள்ளதாக துபாய் அரசர் ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அறிவித்துள்ளார்.
- ஆறு இறக்கைகளை கொண்டுள்ள இந்த பறக்கும் டேக்ஸி, அதிகபட்சமாக மணிக்கு 300 கிலோ மீட்டர் வேகத்தில் பயணம் செய்யும் திறன் கொண்டவையாக இருக்கும்.
- மின்சாரத்தில் இயங்கும் இந்த டேக்ஸியின் மூலம் 241 கிலோ மீட்டர் வரை பயணம் செய்ய முடியும்.
- துபாயின் முக்கிய இடங்களில், பறக்கும் டேக்ஸி நிலையங்களை அமைக்க திட்டமிட்டப்பட்டுள்ளது.
- ஆரம்ப கட்டத்தில் இதற்கான கட்டணங்கள் அதிகமாக இருந்தாலும், விமான டேக்ஸிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது, கட்டணங்கள் குறையும் என்று துபாய் பொதுப் போக்குவரத்து ஆணையம் கூறியுள்ளது.