சென்னை சேப்பாக்கில் 1,427 நாட்களுக்கு பின் களமிறங்கும் தோனி

Update: 2023-02-18 08:37 GMT
    • 16வது ஐபிஎல் டி20 தொடர் மார்ச் மாதம் 31ம் தேதி தொடங்குகிறது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் குஜராத்தும் முன்னாள் சாம்பியன் சென்னையும் மோதவுள்ளன.
  • இந்த தொடரில் பங்கேற்கும் 10 அணிகளும் குரூப் ஏ, குரூப் பி என 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு உள்ளன.
  • குரூப் ஏ பிரிவில் மும்பை, ராஜஸ்தான், கொல்கத்தா, டெல்லி, லக்னோ ஆகிய அணிகளும், குரூப் பி பிரிவில் சென்னை, பஞ்சாப், ஹைதராபாத், பெங்களூரு, குஜராத் ஆகிய அணிகளும் இடம்பெற்று உள்ளன.
  • கடந்த முறைப்போலவே ஒவ்வொரு அணியும் தங்கள் குரூப்பில் உள்ள அணியுடன் ஒருமுறை, எதிர் குரூப்பில் உள்ள அணியுடன் இரு முறை என 14 லீக் ஆட்டங்களில் ஆடவுள்ளன. அந்த வகையில் மொத்தம் 70 லீக் போட்டிகள் ஹோம் மற்றும் அவே ஃபார்மேட்டில் 12 நகரங்களில் நடைபெற உள்ளன.
  • சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 7 போட்டிகள் நடைபெற உள்ளன. தோனி தலைமையிலான சென்னை அணி, மார்ச் 31ம் தேதி தங்கள் முதல் போட்டியில் குஜராத்துடன் அகமதாபாத்தில் மோத உள்ளது.
  • ஏப்ரல் 3ம் தேதி நடக்கும் போட்டியில் லக்னோ உடனும், ஏப்ரல் 8ம் தேதி பரம போட்டியாளரான மும்பை உடனும் சென்னை மோதுகிறது. ஏப்ரல் 12ம் தேதி ராஜஸ்தானுடனும், ஏப்ரல் 17ம் தேதி பெங்களூருவுடனும் மோதும் சென்னை, ஏப்ரல் 21ம் தேதி ஹைதராபாத்துடனும் விளையாடவுள்ளது.
  • ஏப்ரல் 23ம் தேதி கொல்கத்தா உடனும், ஏப்ரல் 27ம் தேதி ராஜஸ்தானுடனும், ஏப்ரல் 30ம் தேதி பஞ்சாப் உடனும், மே 4ம் தேதி லக்னோ உடனும் சென்னை பலப்பரீட்சை நடத்த உள்ளது.
  • மே 6ம் தேதி மும்பையை எதிர்கொள்ள இருக்கும் சென்னை, மே 10ம் தேதி டெல்லியுடனும், மே 14ம் தேதி கொல்கத்தாவுடனும், தங்கள் கடைசி லீக் போட்டியில் மே 20ம் தேதி டெல்லியுடனும் மோத இருக்கிறது.
  • மே 21ம் தேதி வரை லீக் போட்டிகள் நடைபெற உள்ள நிலையில், பிளே-ஆ ஃப் சுற்றுக்கான தேதி அறிவிக்கப்படவில்லை. மே 28ம் தேதி இறுதிப் போட்டி நடைபெற உள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்