விதிகளை மீறிய அரசு பேருந்து.. அடித்து தூக்கி வீசிய லாரி - 12 பேருக்கு நேர்ந்த கதி.. சென்னை NH-ல் பயங்கரம்

Update: 2023-02-26 04:14 GMT
  • உளுந்தூர்பேட்டை அருகே சாலையின் எதிர் திசையில் சென்ற அரசு பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் 12 பேர் படுகாயம்
  • பெங்களூரில் இருந்து 30க்கும் மேற்பட்ட பயணிகளுடன் அரசு பேருந்து ஒன்று நேற்று இரவு புறப்பட்டு உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஆசனூர் வழியாக கடலூர் மாவட்டம் திட்டக்குடி நோக்கி சென்றது.
  • இதற்கிடையே ஆசனூரில் விபத்துகளை தடுப்பதற்காக சாலையின் குறுக்கே தடுப்பு கட்டை போடப்பட்டுள்ளது.
  • இதனால் பெங்களூரு ஆசனூர் சாலையில் இருந்து சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலைக்கு இருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரம் சுற்றிச் செல்ல வேண்டும்.
  • இந்தப் பயண தூரத்தை குறைப்பதற்காக அரசு பேருந்து ஓட்டுநர் திட்டக்கூடிய சேர்ந்த தங்கவேல் 47 என்பவர் அரசு பேருந்து நெடுஞ்சாலையின் எதிர் திசையில் சாலை விதிகளுக்கு புறம்பாக இயக்கியுள்ளார்.
  • அப்போது பெரம்பலூரில் இருந்து அரக்கோணம் நோக்கி சென்ற லாரி மீது அரசு பேருந்து எதிர்பாராத விதமாக மோதி விபத்துக்கு உள்ளானது.
  • இந்த விபத்தில் அரசு பேருந்தில் பயணம் செய்த 12 பயணிகள் காயமடைந்தனர்.
  • காயம் அடைந்தவர்களை அக்கம் பக்கத்து கிராம மக்கள் மீட்டு சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
  • தொடர்ந்து எடைக்கல் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்