"60,000 லிட்டர் பால் கெட்டுப்போனது" - பால் முகவர்கள் நலச் சங்கத்தினர் குற்றச்சாட்டு
- சென்னையில் ஆவின் நிறுவனம் விநியோகித்த 60 ஆயிரம் லிட்டர் பால் கெட்டுப்போனதாக பால் முகவர்கள் நலச் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.
- தமிழகம் முழுவதும் பால் உற்பத்தியாளர்கள் மேற்கொண்டு வரும் பால் நிறுத்தப் போராட்டம் இன்னும் முடிவுக்கு வரவில்லை.
- இதனால், ஆவின் நிறுவனத்துக்கு பால்வரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னை அம்பத்தூர் ஆவின் பண்ணையில் இருந்து விநியோகத்துக்கு அனுப்பப்பட்ட சுமார் 60 ஆயிரம் லிட்டர் நிலைப்படுத்தப்பட்ட பால் கெட்டுப்போனதாக பால் முகவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
- பச்சை நிற பால் பாக்கெட்டுகளை வாங்கிச் சென்ற வாடிக்கையாளர்கள், அது கெட்டுப்போனதாக கூறி, வேறு பால் பாக்கெட்டுகளைக் கொடுக்குமாறு வலியுறுத்தியதாக பால் முகவர்கள் கூறுகின்றனர்.