விளையாட்டு திருவிழா (12.12.2018) : டாஸ் போடுவதில் புதிய மாற்றம் - இனி நாணயத்திற்கு பதில் பேட்

விளையாட்டு திருவிழா (12.12.2018) : 37வது பிறந்தநாளை கொண்டாடும் யுவ்ராஜ்

Update: 2018-12-12 15:38 GMT
விளையாட்டு திருவிழா (12.12.2018)

டாஸ் போடுவதில் புதிய மாற்றம் - இனி நாணயத்திற்கு பதில் பேட்
டாஸ் போடப்படுவது போட்டியை நடத்தும் நாடுகளுக்கே சாதகமாக அமைந்துவிடுகிறது என்ற குற்றச்சாட்டும் எழுந்து வருகிறது. இதனை தடுக்க, வெளியூர் அணிகளே, பேட்டிங் செய்கிறோமா, இல்லை பந்துவீசுகிறோமா என்பதை தேர்வு செய்யும் முறையை டாஸ்க்கு பதிலாக கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. ஆனால் இந்த நடைமுறையை மாற்ற முடியாது என ஐ.சி.சி. கைவிரித்தது. இந்த நிலையில், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் நடத்தும் BIG BASH  தொடரில் புதிய முறை கடைப்பிடிக்கப்பட உள்ளது. அதன் படி இனி டாஸ்க்கு COIN க்கு பதிலாக கிரிக்கெட் பேட்டையே பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன் படி பேட்டை தூக்கி வீசிவிட்டு, HILLS or FLAT என்று தேர்வு செய்ய வேண்டும். HILLS என்றால் பேட்டின் பிற்பகுதி, FLAT என்றால் பேட்டின் முன் பகுதி. இந்த நடைமுறை வெற்றி பெற்றால் இந்த முறை சர்வதேச கிரிக்கெட் போட்டியிலும் பயன்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

37வது பிறந்தநாளை கொண்டாடும் யுவ்ராஜ் 
யுவராஜ் சிங்.. பெயரை போலவே இந்திய கிரிக்கெட் அணியின் இளவரசனாக வலம் வந்த போராளி சச்சின், கங்குலி காலத்திலேயே அணிக்கு வந்த பயம் அறியாத பஞ்சாப் புலி.. தனது அதிரடி ஆட்டத்தால் ரசிகர்களை கட்டிப் போட்ட யுவ்ராஜ் சிங், சிறு வயதிலேயே இந்திய அணியில் தனக்கென இடத்தை உருவாக்கினார். இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் மண்ணில் சதம் விளாசி, இந்திய அணிக்கு பல வெற்றிகளை தேடி தந்தார். 2007ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை டி 20 போட்டியில் ஒரே ஓவரில் 6 சிக்சர்கள் விளாசி உலக சாதனை படைத்தார். 12 பந்துகளில் அரைசதம் விளாசிய பெருமையையும் அவருக்கே சேரும்.  புகழின் உச்சிக்கு சென்ற யுவராஜ் சிங்கை புரட்டி போட்டது புற்றுநோய். முதலில் புற்றுநோயால் அவதிப்பட்டதை மறைத்து கொண்டு 2011 உலகக் கோப்பையை இந்தியா வெல்ல யுவராஜ் சிங் உறுதுணையாக நின்றார். அந்த தொடரின் நாயகன் விருதும் யுவராஜ் சிங்கிற்கே கிடைத்தது. உலகக் கோப்பையை வென்ற சில நாட்களுக்கு பிறகு யுவராஜ் சிங் புற்றுநோயால் பாதிக்கப்பட்டது ரசிகர்களுக்கு தெரிந்தது. அமெரிக்காவில் சிகிச்சை பெற்று குணமடைந்த யுவராஜ் சிங், கிரிக்கெட் போட்டியிலிருந்து விலகிவிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் போர் குணம் கொண்ட யுவராஜ் சிங், புற்றுநோயை வென்று மீண்டும் இந்திய அணியில் இடம்பிடித்தார். டி20 போட்டியில் தனது அதிரடி மூலம் மீண்டும் இடம்பிடித்து அசத்தினார். 2015 ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியின் யுவராஜ் சிங் இடம்பெறவில்லை. இருப்பினும் துவண்டு போகாத யுவராஜ் சிங்,  தனது கடின உழைப்பால் ஒருநாள் போட்டியில் மீண்டும் இடம்பிடித்தார். இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 150 ரன்கள் விளாசி தாம் யார் என்று இந்த உலகத்திற்கு நிரூபித்தார் யுவராஜ் சிங். வாழ்க்கையில் தடைகள் எவ்வளவு வந்தாலும், அதனை உழைப்பால் வெல்லாம் என்பதே யுவராஜ் சிங் வாழ்க்கை சொல்லும் பாடம்..

மழை காலத்தில் நடைபெறும் "MUD RACE"
MUD RACING.. சேற்று நிறைந்த பாதையில் விளையாடப்படும் வினோத போட்டி தான் இது. கார், ஜீப் உள்ளிட்டவைகளை கொண்டு இந்த பந்தயம் நடைபெறும். கரடு முரடான பாதையில் நிறைந்த சகதியில் ஜீப்கள் சீறி செல்லும் இரு வாகனங்களுக்கு இடையே பந்தயம், குறைந்த நேரத்தில், சேறு நிறைந்த பாதையை கடக்கும் வாகனம் என பல்வேறு பிரிவுகளில் இந்தப் போட்டி நடைபெறுகிறது.
கரடு முரடான பாதைகளில் வாகனம் சீறி செல்லும் போது பல்வேறு விபத்துகளும் நிகழும். சேற்றில் சிக்கி, அதிலிருந்து மீண்டு கரைக்கு திரும்பும் போட்டியும் மிகவும் பிரபலம். வெளிநாட்டுகளில் இந்த சேற்று சகதிகளை செயற்கையாக உருவாக்கி இந்தப் போட்டியை நடத்துவார்கள். ஆனால், இந்தியாவில் அவ்வுளவு மெனக்கட தேவையில்லை. கேரளாவில் மழைக்காலத்தில் MUD RACE போட்டிக்கு என தனி ரசிகர்கள் உண்டு. தமிழகத்தில் உள்ள ரேக்ளா போட்டியை போல், மழை காலத்தில் திருச்சூர், வயநாடு உள்ளிட்ட பகுதிகளில் MUD RACE போட்டி நடைபெறும். 

நிஞ்சா வாரியர்களை தேர்ந்தெடுக்கும் போட்டி

நிஞ்சா வாரியர்களை தேர்ந்தெடுக்கும் வினோத சாகச போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. வீடியோ கேம்களில் வருவது போல், வீரர் பல தடைகளை தாண்டி போட்டியை முடிக்க வேண்டும். ஆனால், அது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. ராணுவ வீரர்கள் எடுக்கும் கடும் பயிற்சியை மிஞ்சும் அளவுக்கு இந்தப் போட்டி அமைப்பு அமைந்திருக்கும். இந்த கடின சாகசத்தை மேற்கொண்டு வெற்றி பெறும் வீரர்களுக்கு ஆஸ்திரேலிய நிஞ்சா வீரர் என்ற பட்டம் வழங்குவதோடு, இந்திய ரூபாய் மதிப்பில் 70 லட்சம் பரிசுத் தொகையும் வழங்கப்படும். தடைகளை தாண்டும் இந்த விளையாட்டு தொடர் ஆஸ்திரேலியாவில் பெரும் வரவேற்பை பெற்றுவிட்டது. நாங்களும் நிஞ்சா வீரர்களாக மாறுவோம் என வீடியோ கேம் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் எல்லாம், இப்போது உடல் பயிற்சி பக்கம் கவனம் செலுத்துகிறார்கள். இந்தப் போட்டியை தொகுத்து வழங்குவது முன்னாள் கிரிக்கெட் வீரர் FLINTOFF 
Tags:    

மேலும் செய்திகள்