விளையாட்டு திருவிழா - 31.12.2018 : 150வது டெஸ்ட் வெற்றியை பெற்ற இந்தியா
விளையாட்டு திருவிழா - 31.12.2018 : கேப்டனாக 200வது போட்டியில் தோனி
விளையாட்டு திருவிழா - 31.12.2018 :
மெல்போர்னில் வெற்றிக்கொடி கட்டிய இந்தியா
மெல்போர்னில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. மயாங்க் அகர்வால், புஜாரா, கோலி மற்றும் ரோகித் சர்மாவின் சிறப்பான ஆட்டத்தால் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 443 ரன்கள் குவித்தது. இதனையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி இந்திய வீரர்களின் பந்துவீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் 151 ரன்களுக்கு சுருண்டது. இதனைத்தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 106 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளர் செய்தது. 399 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு இந்திய பந்துவீச்சாளர்கள் கடும் நெருக்கடி கொடுத்தனர். 2 விக்கெட்டுகள் மட்டுமே எஞ்சிய நிலையில் இறுதி நாள் ஆட்டத்தை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி 261 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 137 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இந்திய அணி 2க்கு ஒன்ற கணக்கில் தொடரில் முன்னிலை பெற்றுள்ளது. ஒட்டுமொத்தமாக 9 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வேகப்பந்துவீச்சாளர் பும்ரா, ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். மெல்போர்னில் 38 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி டெஸ்ட் போட்டியில் வென்றுள்ளது. டெஸ்ட் வரலாற்றில் இந்திய அணி பெறும் 150வது வெற்றி இதுவாகும். மேலும் ஒரே ஆண்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வேகப்பந்துவீச்சாளர் குழு என்ற பெருமையை பும்ரா, முகமது ஷமி, இஷாந்த் சர்மா ஆகியோர் வென்றுள்ளனர்.
ஆசிய கோப்பையை வென்ற இந்தியா
செப்டம்பர் மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரை ரசிகர்கள் அவ்வளவு எளிதாக மறந்து விட முடியாது. விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டதால் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி இந்த தொடரில் களமிறங்கியது. ஹாங்காங்கிடம் வெற்றி பெற்ற இந்திய அணி, பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே பாகிஸ்தானுடன் மோதியது. இந்திய வீரர்களின் அபார செயல்பட்டால் பாகிஸ்தான் அணியை இந்தியா எளிதில் வீழ்த்தியது. இதனைத் தொடர்ந்து சூப்பர் 4 சுற்றில் வங்கதேசம், பாகிஸ்தான் அணிகளை இந்தியா புரட்டிப்போட்டது. ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தை இந்தியா சமன் செய்தது. இந்தப் போட்டியில் முக்கிய வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டதால் கேப்டனாக தோனி அணியை வழிநடத்தினார். இறுதிப் போட்டியில் இந்தியாவும், வங்கதேசமும் பலப்பரீட்சை நடத்தியது. இந்தப் போட்டியில் இந்திய அணி கடைசி பந்தில் திரில் வெற்றியை பெற்று 7வது முறையாக ஆசிய கோப்பை கைப்பற்றி சாதனை படைத்தது.