விளையாட்டு திருவிழா (05.12.2018) - WWE போட்டியில் இந்தியர்களுக்கு வாய்ப்பு!
விளையாட்டு திருவிழா (05.12.2018) - இந்தியா Vs ஆஸி - நாளை முதல் டெஸ்ட்
விளையாட்டு திருவிழா (05.12.2018)
WWE போட்டியில் இந்தியர்களுக்கு வாய்ப்பு !
இந்தப் போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கு பெயர், பணம், புகழ் என கொட்டும். இந்த தொடரில் இந்தியாவை சேர்ந்த வீரர்களும் இடம்பெற்று உலகப் புகழ் பெற்றுள்ளனர். அதில் முக்கியமானவர் THE GREAT KHALI 7 புள்ளி 1 அடி உயரம், மாமிச மலை போன்ற தோற்றத்தை கொண்டு ரசிகர்களை ஈர்த்தவர். அவர் களத்தில் நிற்கும் போது, மல்யுத்த வீரர்ளே கொசு போல் தோன்றுவார்கள். அதே வரிசையில் இடம்பெற்று உலக புகழ் பெற்றவர் ஜிந்தர் மஹால்.. இந்தியாவை பூர்விகமாக கொண்டாலும், கனடாவில் பிறந்து வளர்ந்தவர். ஆனால் WWE போட்டியில் இந்திய வீரராக வலம் வந்து சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றவர். இந்த வரிசையில் நீங்களும் இடம்பெறலாம்.. ஆம், இந்தியாவில் உள்ள மல்யுத்த வீரர்களை தேர்வு செய்து, போட்டியில் களமிறக்க WWE நிர்வாகம் முடிவு எடுத்துள்ளது. இதற்கு காரணம், அமெரிக்காவுக்கு பிறகு அதிகளவு WWE போட்டியை பார்க்க கூடியவர்கள் இந்தியர்கள் என்பதால், அதிகளவில் இந்திய வீரர்களை பயன்படுத்த திட்டமிட்டுள்து. இதற்காக பிரபல வீரர் MAT HARDY தலைமையிலான குழு இந்தியா வர உள்ளது. இந்தியாவில் மும்பை, சென்னை உள்ளிட்ட இடங்களில் மல்யுத்த வீரர்களின் திறமையை ஆய்வு செய்து பின்னர் அவர்களை இந்த குழு தேர்வு செய்யும். பின்னர், தேர்வான வீரர்களை அமெரிக்காவுக்கு அழைத்து செல்லும் இந்த குழு, அவர்களுக்கு பயிற்சி அளித்து WWE போட்டியில் களமிறக்கும். இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொண்டால், JOHN CENA. THE UNDERTAKER உள்ளிட்ட வரிசையில் இந்திய வீரர்களும் இடம்பெறலாம்.
இந்தியா Vs ஆஸி - நாளை முதல் டெஸ்ட்
இந்தியா, ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நாளை அடிலெயட் நகரில் தொடங்குகிறது. 4 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் வெற்றியுடன் கணக்கை தொடங்க இந்தியா தீவிரம் காட்டி வருகிறது. வெற்றி கோப்பையை இரு அணி கேப்டன்களும் அறிமுகம் செய்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கேப்டன் கோலி, சொந்த மண்ணில் விளையாடும் ஆஸ்திரேலிய அணியை குறைத்து மதிப்பிடவில்லை என்று தெரிவித்தார். ஆஸ்திரேலிய அணியின் திறமைக்கு குறைவே கிடையாது என்று புகழாரம் சூட்டிய கோலி, வெற்றிக்காக கடுமையாக போராடுவோம் என்று தெரிவித்தார். இந்திய அணி 12 வீரர்களை கொண்ட பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் ரோஹித் சர்மாவுக்கு இடம் கிடைக்குமா இல்லை விஹாரிக்கு இடம் கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
ஆஸ்திரேலிய அணியில் மிட்செல் மார்ஷ்க்கு பதிலாக PETER HANDSCOMB க்கு இடம் கிடைத்துள்ளது. வார்னர், ஸ்மித் இல்லை என்றாலும், உஸ்மான் கவாஜா, சான் மார்ஷ், FINCH ஆகியோர் இந்திய அணிக்கு நெருக்கடி தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங் பலம் குன்றியதாக இருந்தாலும், பந்துவீச்சு அசுர பலத்துடனே உள்ளது. STARC. PAT CUMMINS, JOSH HAZLEWOOD ஆகியோர் இந்திய அணி பேட்ஸ்மேன்களுக்கு ஆபத்தை விளைவிப்பார்கள். சுழற்பந்துவீச்சாளர் நாதன் லயானும், இந்திய வீரர்களுக்கு கடந்த முறை தலை வலியை ஏற்படுத்தினார். பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே முதல் டெஸ்ட் இந்திய நேரப்படி வியாழன் அதிகாலை 5.30 மணிக்கு தொடங்குகிறது.
சர்ச்சைகளுக்கு பெயர் போன ஆஸி வீரர்கள்
இந்தியா, பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியில் மோதுகிறது என்றால், ஏற்படும் பரபரப்பையே மிஞ்சும் அளவுககு இந்தியா, ஆஸ்திரேலியா போட்டிகள் மாறியது. அதற்கு காரணம் 2008ஆம் ஆண்டு சிட்னியில் நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டி தான். அதற்கு முன் இங்கிலாந்தை அதன் சொந்த மண்ணில் புரட்டி போட்ட இந்திய அணி, ஆஸ்திரேலியாவை வீழ்த்தும் உத்வேகத்துடன் அந்நாட்டு மண்ணில் கால் பதித்தது. இந்தியாவை வீழ்த்த ஆஸ்திரேலியா கையாண்ட முறை, சர்ச்சைய வெடித்தது. இந்திய வீரர்களை தொடர்ந்து மோசமான வார்த்தைகளால் ஆஸ்திரேலிய வீரர்கள் வசைப்பாடினர். சீண்டிய ஆஸ்திரேலிய வீரர்களுக்கு தக்க பதிலடி தந்தார் ஹர்பஜன் சிங். இதை சற்றும் எதிர்பார்க்காத ஆஸ்திரேலிய அணி, நிறவெறியோடு ஆஸதிரேலிய வீரர் (SYMONDS) சைமண்ட்ஸ்-ஐ குங்கு என்று ஹர்பஜன் திட்டினார் என்று புகார் அளித்தது. இது பெரும் பூகம்பத்தை ஏற்படுத்தியது. ஹர்பஜனுக்கு 3 டெஸ்ட் போட்டியில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது. இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பை தெரிவிக்க , முறைப்படி விசாரணை நடத்திய ஐ.சி.சி. தண்டனையை குறைத்தது. இந்த விவகாரத்தில் எங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டால் தொடரை விட்டு வெளியேறிவிடுவோம் என இந்தியா எச்சரிக்கை விடுக்க, ஐ.சி.சி. பணிந்தது. சிட்னி டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணிக்காக நடுவர் 2 பேரையும் சேர்த்து 13 வீரர்களுடன் விளையாடியது ஆஸ்திரேலிய அணி.. டிராவிட், கங்குலி உள்ளிட்ட முக்கிய வீரர்களுக்கு தொடர்ந்து தவறான முடிவை நடுவர்கள் அறிவித்தனர். இதே போன்று ஆஸ்திரேலிய வீரர் சைமண்ட்ஸ் ஆட்டமிழந்தாலும், அவருக்கு 2 முறை அவுட் அளிக்க நடுவர் மறுத்தனர். இதன் விளைவாக இந்திய அணி தோல்வியை தழுவியது. வெற்றி பெற வேண்டும் என்றால் எந்த நிலைக்கும் ஆஸ்திரேலியா செல்லும் என உண்மை உலகிற்கு தெரிந்தது.
கிரிக்கெட் போட்டிகளிலிருந்து கம்பீர் ஓய்வு
சச்சின் ஆட்டமிழந்தால் டி.வி.யை OFF செய்துவிட்டு சென்ற தலைமுறையை, நம்பிக்கையுடன் மீண்டும் பார்க்க வைத்து கிரிக்கெட்