விமானிக்கு வந்த எச்சரிக்கை..பாக்.,யில் திடீரென தரையிறங்கிய இந்திய விமானம் -என்ன காரணம்?பயணிகள் நிலை?

Update: 2022-07-05 12:28 GMT

விமானிக்கு வந்த எச்சரிக்கை..பாக்.,யில் திடீரென தரையிறங்கிய இந்திய விமானம் -என்ன காரணம்?பயணிகள் நிலை?

டெல்லியில் இருந்து துபாய் சென்ற ஸ்பைஸ்ஜெட் விமானம் பாகிஸ்தானின் கராச்சி நகரில் தரையிறக்கப்பட்டது.

டெல்லியில் இருந்து துபாய் சென்ற ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்திற்கு சொந்தமான போயிங் 737 விமானம் பாகிஸ்தானின் கராச்சி நகரில் தரையிறக்கப்பட்டது. விமானிக்கு எச்சரிக்கை விடுக்கும் இண்டிகேட்டர் செயலிழப்பு காரணமாக விமானம் கராச்சியில் தரையிறக்கப்பட்டதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. பயணிகள் அனைவரும் பத்திரமாக உள்ளனர் என்றும் அவர்களுக்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது என்றும் மாற்று விமானம் மூலம் துபாய் அழைத்துச் செல்லப்படுவார்கள் எனவும் ஸ்பைஸ்ஜெட் தெரிவித்துள்ளது. விமானத்தின் இடது பக்க எரிபொருள் டேங்கில் எரிபொருள் குறைய தொடங்கியதை விமானிகள் கண்டறிந்ததாக இந்திய விமான போக்குவரத்து இயக்குனரகம் தெரிவித்திருக்கிறது. இதனையடுத்து விமானம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாகிஸ்தானில் தரையிறக்கப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்