வியட்நாம் நாட்டில் வீசிய புயலால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 64ஆக அதிகரித்துள்ளது. வியட்நாமில் யாகி என்ற சூறாவளி தாக்கியதோடு, அதன்பின்னர் காற்றழுத்தமாக வலுவிழந்ததால், பல ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டது. ஃபு-தொ மாகாணத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அங்கு உள்ள இரும்பு பாலம் ஒன்று திடீரென ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டது. பாலத்தில் 10க்கும் மேற்பட்ட கார், பைக்குகள், டிரக்குகள் அடித்துச் செல்லப்பட்டதாகவும் 13 பேர் மாயமாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாலம் விழும்போது, லாரி ஒன்று கவிழ்ந்து விழும் காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.