உக்ரைனின் ஆயுதப் படைத் தளபதியாக இருந்த வலேரி ஜலுஷ்னி மாற்றம் - வெளிவந்த முக்கிய தகவல்
2019ம் ஆண்டு முதல் உக்ரைனின் தரைப்படைகளுக்கு தலைமை தாங்கிய கர்னல் ஜெனரல் ஒலெக்சாண்டர் சிர்ஸ்கி ஆயுதப் படைகளின் தளபதியாக பதவி உயர்வு பெற்றுள்ளார்... ஆயுதப் படைத் தளபதியாக இருந்த வலேரி ஜலுஷ்னி 2 ஆண்டுகளுக்கு முன்பு தேசிய வீரராக கொண்டாடப்பட்ட நிலையில் சமீபமாக போரில் உக்ரைன் படைகளுக்கு தொடர் பின்னடைவுகள் ஏற்பட்டன... ட்ரோன்கள் மற்றும் உயர் ரக ஆயுதங்கள் உள்ளிட்ட தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் மூலம் மட்டுமே உக்ரைன் ரஷ்யாவின் மிகப் பெரிய இராணுவத்துடன் போட்டியிட முடியும் என்று நேர்காணல் ஒன்றில் வலேரி ஜலுஷ்னி தெரிவித்தார்... மேலும், போரில் வீரர்கள் பற்றாகுறை ஏற்பட்ட நிலையில், வீரர்களை அணிதிரட்ட சட்ட மாற்றங்கள் அவசியம் என்றும் அவர் விமர்சித்திருந்தார்... இதனால் ஜெலென்ஸ்கிக்கும் வலேரிக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டதைத் தொடர்ந்து உக்ரைனிய ஆயுதப் படைத் தளபதியாக ஒலெக்சாண்டர் சிர்ஸ்கி நியமிக்கப்பட்டுள்ளார்...