சவால் விட்ட கமலா... பைடனை வீழ்த்திய அதே அஸ்திரம்... கையில் எடுத்த ட்ரம்ப்... அதிரும் USA

Update: 2024-08-03 12:27 GMT

அமெரிக்க குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளரான டொனால்ட் ட்ரம்ப், ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிசுடன் நேருக்கு நேர் விவாதிக்க ஒப்புக் கொண்டுள்ளார்...

ஃபாக்ஸ் நியூஸ் செய்தி நிறுவனம் வரும் செப்டம்பர் 4ம் தேதி நடத்தும் விவாத நிகழ்ச்சியில் இருவரும் நேருக்கு நேர் விவாத மேடையில் மோதவுள்ளனர்... இதை ட்ரம்ப் தனது ட்ரூத் சமூக வலைதளப்பக்கத்தில் தெரிவித்துள்ளார்... இதற்கு முன் அமெரிக்க அதிபர் பைடன் தேர்தல் பந்தயத்தில் இருந்த போது ட்ரம்ப்புடன் நடந்த விவாதத்தில் தோல்வியைத் தழுவினார்... அதன்பிறகு அவரது கட்சியிலேயே கொடுக்கப்பட்ட அழுத்தத்தால் தான் பைடன் தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து விலகி கமலா ஹாரிசுக்கு தன் முழு ஆதரவையும் அளித்தார்... கமலா ஹாரிஸ் ட்ரம்ப்பை நேருக்கு நேர் விவாதத்தில் சந்திக்கத் தயாரா என சவால் விட்ட நிலையில், செப்டம்பர் 4ம் தேதி இருவரும் பங்குபெறும் விவாத நிகழ்ச்சி முக்கியத்துவம் பெற்றுள்ளது...

Tags:    

மேலும் செய்திகள்