Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (05-01-2024) | Morning Headlines | Thanthi TV
Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (05-01-2024) | Morning Headlines | Thanthi TV
- தமிழக அரசு கோரியுள்ள 37 ஆயிரத்து 907 கோடி ரூபாய் வெள்ள நிவாரணத் தொகையை மத்திய அரசு உடனே வழங்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை... மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திப்பதற்கு தமிழக எம்.பி-க்கள் நேரம் கேட்டுள்ளதாகவும் தகவல்...
- டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்தார், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்... சென்னையில் வருகிற 19ம் தேதி நடைபெறும், 'கேலோ இந்தியா விளையாட்டு போட்டி' தொடக்க விழாவுக்கு வருவதாக பிரதமர் கூறியதாக தகவல்.. தமிழக வெள்ள நிவாரண நிதி தொடர்பாக பிரதமரிடம் வலியுறுத்தியதாகவும் பேட்டி...
- தமிழகத்துக்கு 6 லட்சத்து 96 ஆயிரத்து 666 கோடி ரூபாய் வரிப் பணத்தை மத்திய அரசு வழங்கியுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்... சென்னையில் 170 கிலோ மீட்டர் நீளத்துக்கு மெட்ரோ ரயில் மற்றும் 1260 கோடியில் விமான நிலையம் கட்டியது மத்திய அரசு தான் எனவும் விளக்கம்...
- தமிழகத்தில் 6 புள்ளி 23 லட்சம் கோடியை வரியாக பெற்றுக் கொண்டு 6 புள்ளி 93 லட்சம் கோடியை மத்திய அரசு திரும்ப அளித்துள்ளது... ஜல்ஜீவன், மருத்துவ காப்பீடு, விவசாயிகளுக்கு உதவி உள்ளிட்ட திட்டங்களை பட்டியலிட்டு பாஜக தலைவர் அண்ணாமலை பேச்சு....
- அமைச்சர் பதவியில் செந்தில் பாலாஜி நீடிப்பதை எதிர்த்து மேல் முறையீடு... உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை...
- வருகிற 13ஆம் தேதியன்று நாம் தமிழர் கட்சியின் பொதுக்குழு கூட்டம்... சென்னை வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெறும் என கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவிப்பு...
- பொங்கல் சிறப்பு பேருந்துகள் இயக்கம் பற்றிய அறிவிப்பு வருகிற 8ஆம் தேதி வெளியாகிறது... 100 புதிய பேருந்துகளை முதலமைச்சர் ஸ்டாலின் துவக்கி வைக்க இருப்பதாகவும் தகவல்...
- பொங்கல் பண்டிகைக்காக ஒரு கோடியே 68 லட்சம் சேலைகள் தயார் என அமைச்சர் காந்தி தகவல்... ஒரு கோடியே 63 லட்சம் வேட்டிகளும் தயாராக உள்ளதாக பேட்டி.