திடீரென தளபதியுடன் மீட்டிங்.. முடிந்த உடன் ஹமாஸ்-க்கு ஷாக் கொடுத்த பிரதமர்
ஹமாஸ் அமைப்பினரை ஒழிக்க வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்துடன், பணியாற்றி வருவதாக, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். டெல் அவிவ் நகரில் பாதுகாப்புத்துறை அமைச்சர் யோவ் காலன்ட், ராணுத் தலைமை தளபதி ஹெர்சி ஹால்வியுடன் பிரதமர் நெதன்யாகு ஆலோசனை மேற்கொண்டார். பாதுகாப்பு ஏற்பாடுகள் அப்போது அவர்கள் கலந்தாலோசனை மேற்கொண்டனர். முன்னதாக, கிரீக் பிரதமர் கிரியாகோஸ், டச்சு பிரதம் ரூத், உள்ளிட்டோருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, ஹமாஸ் நடத்திய தாக்குதல் குறித்து விவரித்ததோடு, இந்த போரில் இஸ்ரேல் வெற்றி பெறும் என உறுதிப்பட தெரிவித்தார்.