பைடனை திக்குமுக்காட வைத்த தகவல் - களத்தில் இறங்கும் கமலா ஹாரீஸ்? - ரியல் அரசியல் ஆட்டம் ஆரம்பம்
அமெரிக்க அதிபர் தேர்தலில் பைடனால், குடியரசு கட்சி வேட்பாளர் டிரம்பை வீழ்த்த முடியாது என கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ளன. பைடனும் போட்டியிலிருந்து விலகுவது குறித்து விலக பரிசீலிப்பதாக தகவல் வெளியாகியிருக்கும் வேளையில், கமலா ஹாரிசை அதிபர் வேட்பாளராக்க ஜனநாயக கட்சியின் மூத்த தலைவர்கள் பரிசீலிப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பைடனின் ஜனநாயக கட்சி அடுத்த மாதம் நடக்கவிருக்கும் பொதுக்குழுவில் அதிபர் வேட்பாளரை இறுதி செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. ஜனநாயக கட்சியின் துணை குடியரசு தலைவராக இருக்கும் கமலா ஹாரிஸ் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். 79 % ஜனநாயக கட்சியினர் கமலா ஹாரிசை வேட்பாளராக அறிவிக்க ஆதரவளிப்பதாக கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ளன. கமலா ஹாரிசால் டிரம்பை வெற்றிப்பெற முடியும் எனவும் ஜனநாயக கட்சியின் நம்புகிறார்கள். துப்பாக்கி சூடு சம்பத்திற்கு பிறகு டிரம்ப் - கமலா ஹாரிஸ் மோதினால் யாருக்கு வாய்ப்பு என்ற கருத்துக்கணிப்பில், டிரம்ப் 51 % ஆதரவையும், கமலா ஹாரிஸ் 47 % ஆதரவையும் பெற்றிருக்கிறார்கள்.