ஒரு பந்தில் தலைப்பு செய்தியே மாறியிருக்கும்.. தென்னாப்பிரிக்காவுக்கு மரண பயம் காட்டிய நேபாளம்
டி20 உலகக்கோப்பை தொடரின் பரபரப்பான லீக் போட்டியில் நேபாளத்தை ஒரு ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா த்ரில் வெற்றி பெற்றது.
குரூப் டி பிரிவில் செயின்ட் வின்சன்ட் நகரில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா, ரன் சேர்க்க முடியாமல் திணறியது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்ததால் 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு தென் ஆப்பிரிக்கா 115 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ரீஸா ஹென்ட்ரிக்ஸ் 43 ரன்கள் எடுத்தார். அடுத்து ஆடிய நேபாளம் நிதானமாக ஆடி இலக்கை நெருங்கியது. கடைசி ஓவரில் நேபாளத்தின் வெற்றிக்கு 8 ரன்கள் தேவைப்பட்டது. பார்ட்மேன் வீசிய 3வது பந்தில் குல்ஷான் ஃபோர் அடித்தார். அடுத்த பந்தில் அவர் 2 ரன்கள் எடுத்தார். இதனால் கடைசி பந்தில் 2 ரன்கள் தேவைப்பட குல்ஷான் ரன் அவுட் ஆனார். இதனால் 1 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியை ருசித்த தென் ஆப்பிரிக்கா, நேபாளம் அளிக்கவிருந்த அதிர்ச்சியில் இருந்து தப்பியது.