இலங்கையில் சுற்றுலாத்துறை அமைச்சருக்கு எதிராக, பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இலங்கை இந்தியாவின் ஒரு பகுதி என்று, இந்தியாவுக்கு வந்திருந்த போது, இலங்கை சுற்றுலாத்துறை அமைச்சர் ஐரின் பெர்னாண்டோ கூறியிருந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், கொழும்புவில் உள்ள சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவிற்கு எதிர்ப்பு தெரிவித்து முழக்கங்களை எழுப்பினர். இதே கருத்தை, சிறுபான்மை சார்ந்த கட்சியினரோ மக்களோ தெரிவித்திருந்தால் உடனை கைது செய்யப்பட்டிருப்பார்கள் என்றும், அமைச்சர் என்பதால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டினர்.