"இது புதுசா இருக்குண்ணே..!" இலங்கையில் ஊன்ற சீனாவிலிருந்து வந்த ரெடிமேட் வீடுகள்
இலங்கையின் மன்னாரில், சீனா அன்பளிப்பாக வழங்கிய ஆயத்த வீடு (Pre Fabricated Houses) பொருத்தும் பணி நடைபெற்றது. வடகிழக்கு மீனவர்களுக்காக சீன அரசு சார்பில் 500 ஆயத்த வீடுகள் வழங்கப்பட்டன. அதில், மன்னாரில் உள்ள நீரியல் வள அலுவலகத்தில் ஒரு வீட்டை கடற்படையினர் பொருத்தும் பணியில் ஈடுபட்டனர். யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 116 வீடுகளும், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், திருகோணமலை உள்ளிட்ட 6 இடங்களில் தலா 64 வீடுகளும் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.