அமெரிக்கா - 2 விமான நிலையங்கள் இடையே மோதல்... சான் பிரான்ஸிஸ்கோ என்ற பெயர் யாருக்கு சொந்தம் ?
அமெரிக்காவின் சான் பிரான்ஸிஸ்கோ சர்வதேச விமான நிலையத்திற்கும், சான் பிரான்ஸிஸ்கோ பே ஓக்லாந்த் சர்வதேச விமான நிலையத்திற்கும் மோதல் ஏற்பட்டுள்ளது. சான் பிரான்ஸிஸ்கோ என்ற பெயரை ஓக்லாந்த விமான நிலையம் பயன்படுத்தக் கூடாது என்று கூறி சான் பிரான்ஸிஸ்கோ சர்வதேச விமான நிலையம் வழக்கு தொடர்ந்துள்ளது. ஒரே போன்ற பெயர் இருந்தால், பயணிகளுக்கு குழப்பம் ஏற்படும் என்று கூறி வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த இரண்டு விமான நிலையங்களும் சான் பிரான்ஸிஸ்கோ நகருக்கு அருகே உள்ளது குறிப்பிடத்தக்கது.