ஆப்கானிஸ்தானின் ஹெராத் நகரில் மீண்டும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.3ஆகப் பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அங்கு கடந்த பல நாட்களாக ஏற்பட்ட தொடர்ச்சியான நடுக்கங்களால் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.