5வது முறையாக அதிபரான பின் முதல் பயணமாக புதின் செல்லும் நாடு - ஒரு கண் வைக்கும் இந்தியா
ரஷ்ய அதிபர் புதின் நாளை இரண்டு நாள் பயணமாக சீனா செல்ல இருக்கிறார். அண்மையில் ரஷ்ய அதிபராக 5வது முறையாக அவர் பதவியேற்றிருந்த நிலையில், அவர் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டு பயணம் இது. இதேபோல் சென்ற ஆண்டு, மீண்டும் சீன அதிபராக தேர்வாகிய ஜி ஜின்பிங், முதல் வெளிநாட்டு பயணமாக ரஷ்யாவிற்கு சென்றிருந்தார். மேற்கத்திய நாடுகளுக்கு எதிராக குரல் கொடுத்து வரும் சீனா மற்றும் ரஷ்யாவுக்கு இடையேயான உறவு மிகவும் இணக்கமான பாதையில் பயணித்து வருகிறது. இதுவரை சீன அதிபராக ஜி ஜின்பிங் பதவி ஏற்ற பிறகு 40 முறை இருநாட்டு தலைவர்களும் நேரில் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தியிருப்பது குறிப்பிட்டத்தக்கது.