ராணுவத்தினரிடம் சரணடைந்த புலிகளின் முக்கிய போராளிகளுக்கு நடந்தது என்ன என்று,இலங்கை நாடாளுமன்றத்தில் எம்பி, ஸ்ரீதரன் கேள்வி எழுப்பினர். நாடாளுமன்றத்தில் பேசிய அவர்,
ஜே.வி.பியின் 60ஆயிரம் வரையிலான போராளிகள் கொடூரமாக கொல்லப்பட்டதாகவும், இது பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் இரத்தம் படிந்த வரலாறு என்றும் கூறினார். பலமுறை இந்தச் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவரப்படுவதாக ஆட்சியாளர்கள் கூறிய நிலையில், இன்று வரை இதில் எவ்வித மாற்றங்களையும் செய்யவில்லை என்றும்,எம்பி ஸ்ரீதரன் தெரிவித்தார்.