முடிவுக்கு வந்த ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையத்தின் செயல்பாடு
உக்ரைனின் ஜப்போரிஜியா அணுமின் நிலையத்தின் செயல்பாடு முழுமையாக நிறுத்தப்பட்டு மூடப்பட்டது.
ஐரோப்பாவிலேயே பெரிய அணுமின் நிலையமான ஜப்போரிஜியா அணுமின் நிலையமானது போரில் ரஷ்யாவின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டது. உக்ரைனும்
ரஷ்யாவும் அணுமின் நிலையத்தைச் சுற்றி அபாயகரமாக மாறி மாறி தாக்குதல்கள் நடத்தியதால் கதிர்வீச்சு வெளிப்படும் அபாயம் ஏற்பட்டது. சர்வதேச அணுசக்தி முகமை
எவ்வளவோ எச்சரித்தும் தாக்குதல் நிறுத்தப்படாத நிலையில், அணுமின் நிலையத்திற்கு வரும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. முன்னதாக 5 உலைகளின் செயல்பாடு
நிறுத்தப்பட்ட நிலையில், அணு உலைகளைக் குளிர்விப்பதற்கான மின்சார தேவைக்காக 6வது உலை மட்டும் செயல்பட்டு வந்தது. இந்நிலையில், உக்ரைனின் மின்
விநியோகக் கட்டமைப்புடன் அணுமின் நிலையம் மீண்டும் இணைக்கப்பட்டதை அடுத்து, 6வது உலையின் தேவை இல்லாததால் தற்போது அதன் செயல்பாடும் நிறுத்தப்பட்டு
மொத்தமாக அணு மின் நிலையமானது மூடப்பட்டுள்ளது.