மடக்க நினைத்த கமலா... ஸ்மார்ட் மூவ்-ஆல் திணற வைத்த ட்ரம்ப்... உலகை அதிர வைத்த "வார்த்தை" விவாதம்
அமெரிக்காவின் ஃபிலடெல்ஃபியா நகரில் நடந்த நேரடி விவாதத்தில், துவக்கம் முதலே குடியரசுக் கட்சி வேட்பாளர் ட்ரம்ப்பும்..., ஜனநாயகக் கட்சி வேட்பாளர் கமலா ஹாரிசும் மாறி மாறி குற்றச்சாட்டுகளை முன்வைத்து, விவாதத்தை விறுவிறுப்பு குறையாமல் பார்த்துக் கொண்டனர்...
உலகமே உற்று நோக்கிக் கொண்டிருக்கும், ரஷ்யா-உக்ரைன் போர், காசா-இஸ்ரேல் போர் குறித்த கேள்விகள் முன்வைக்கப்பட்டன...
ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரைன் வெல்ல வேண்டும் என விரும்புகிறீர்களா? என்று கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த ட்ரம்ப்,
"போரை நிறுத்த நான் விரும்புகிறேன்" என்று பளிச்சென பதில் தந்தார்...
ரஷ்ய படையெடுப்பை சமாளிக்க உக்ரைனுக்கு உதவி செய்ய அமெரிக்கா அதிகம் செலவு செய்வதாக குற்றம் சாட்டிய ட்ரம்ப், அமெரிக்காவுடன் ஒப்பிடும்போது ஐரோப்பா மிகக் குறைவான அளவே நிதி அளிப்பதாக சுட்டிக்காட்டினார்...
மேலும், ரஷ்ய அதிபர் புதின் மற்றும் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி இருவரையுமே தனக்கு நன்றாக தெரியும் என விளக்கமளித்தார் ட்ரம்ப்...
தொடர்ந்து காசா-இஸ்ரேல் போர் குறித்து கேள்வி நகர்ந்தது...
அப்போது, "தன்னைப் பாதுகாத்துக் கொள்ள இஸ்ரேலுக்கு உரிமை உள்ளது"...என்றும் இஸ்ரேல் தன்னை எப்படி பாதுகாக்கிறது என்பது முக்கியம்" எனவும் தெரிவித்த கமலா ஹாரிஸ்...
"இந்தப் போர் முடிவுக்கு வர வேண்டும் என்பதே என் விருப்பம்" என விளக்கமளித்தார்...
போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்த கமலா, காசாவை மறுகட்டமைப்பு செய்யவும், இரு நாடுகள் தீர்வையும் மீண்டும் வலியுறுத்தினார்...
இதே கேள்விக்கு பதிலளித்துப் பேசிய ட்ரம்ப்..."நான் அதிபராக இருந்திருந்தால் போரே நடந்திருக்காது" என அதிரடி காட்டினார்...
"கமலா ஹாரிஸ் இஸ்ரேலை வெறுக்கிறார்... அவர் மட்டும் அதிபரானால் இரண்டு ஆண்டுகளில் இஸ்ரேலே இருக்காது" என்றும் சாடினார் ட்ரம்ப்...