அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 5ம் தேதி நடைபெறுகிறது. ஜனநாயகக் கட்சி வேட்பாளராக துணை அதிபர் கமலா ஹாரிசும், குடியரசுக் கட்சி வேட்பாளராக முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்பும் களம் காண்கின்றனர். இந்நிலையில், ஜனநாயக கட்சியின் தேசிய மாநாடு சிகாகோவில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற கமலா ஹாரிசுக்கு அக்கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் பேசிய கமலா ஹாரிஸ்,
அதிபர் ஜோ பைடனுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகக் குறிப்பிட்டார். நாட்டை வழிநடத்தும் வரலாற்றுச் சிறப்புமிக்க தலைமை என்றும், வாழ்நாள் முழுவதும் நாட்டுக்கு சேவை செய்துள்ளதாகவும் புகழாரம் சூட்டினார். நாட்டின் எதிர்காலத்திற்காக, தொலைநோக்குப் பார்வையுடன் நாம் அனைவரும் இங்கு ஒன்றிணைந்துள்ளதாகவும், அதே நம்பிக்கையுடன் இந்த ஆண்டு நவம்பரில், ஒரே குரலாக, மக்களின் குரலாக அது பிரதிபலிக்கும் என்றும் குறிப்பிட்டார். நாம் உறுதியுடன் போராடினால் வெற்றி நிச்சயம் என்றும் கமலா ஹாரிஸ் தெரிவித்தார்