தனது கருப்பின அடையாளத்தை கேலி செய்த டிரம்ப்பிற்கு
அமெரிக்காவின் துணை அதிபர் கமலா ஹாரிஸ் பதிலடி
கொடுத்துள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலில், ஜனனாயக
கட்சி சார்பில் போட்டியிரும் கமலா ஹாரிஸ், இது போன்ற
இனவெறி தாக்குதல்கள், கேலிகளை தான் பல முறை
எதிர்கொண்டுள்ளதாக தெரிவித்தார். துணை அதிபராவதற்கு
முன்பு செனட்டராகவும், அட்டார்னி ஜெனரலாகவும்,
அரசு வழக்கறிஞராகவும் செயல்பட்ட காலங்களில் இத்தகைய வெறுப்பு பேச்சுகளை எதிர்கொண்டுள்ளதாக கூறினார். டிரம்ப் போன்றவர்களை நன்கு அறிவேன் என்றார்.