இஸ்ரேல்-காசா இடையே போர் நிறுத்தப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாவிட்டால், போர் விரிவடையும் அபாயம் உருவாகும் என்பதை எச்சரிக்கும் வகையில் இஸ்ரேல் அரசுக்கு எதிராக பொதுமக்கள் டெல் அவிவில் மிகப்பெரிய போராட்டம் நடத்தினர். அமெரிக்கா, கத்தார் மற்றும் எகிப்து நாடுகளின் மத்தியஸ்தத்தில் தோஹாவில் நடைபெற்று வரும் போர்நிறுத்த பேச்சுவார்த்தை அடுத்த வாரம் மீண்டும் தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.