நெதன்யாகு தலையில் இறங்கிய பேரிடி... இஸ்ரேல் போரில் உலகமே எதிர்பாரா டுவிஸ்ட்
காசாவில் மேலும் 6 பிணைக்கைதிகள் கொல்லப்பட்ட நிலையில், போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஒத்துழைக்காத இஸ்ரேல் அரசுக்கு கண்டனம் தெரிவித்து இஸ்ரேலியர்கள் மிகப்பெரிய போராட்டம் நடத்தினர்... அப்போது இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுக்குக் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. போராட்டக்காரர்களைத் தடுக்க முயன்ற போது போலீசாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டது... எஞ்சியுள்ள 101 பிணைக்கைதிகளை மீட்டுக் கொண்டுவர கோரிக்கை வைத்து நடவடிக்கை எடுக்கக் கோரி ஜெருசலேம், டெல் அவிவ் நகரங்களில் கிட்டத்தட்ட 5 லட்சம் பேர் போராடிய நிலையில் இஸ்ரேலில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது...