போர் நிறுத்தத்திற்கு ஓகே சொன்ன ஹமாஸ்... "நிறுத்த மாட்டோம்.." - நெதன்யாஹு பதிலால் அதிர்ச்சி

Update: 2024-05-07 14:29 GMT
  • ஏழு மாதங்களாக தொடரும் இஸ்ரேல் ஹமாஸ் போரில் இதுவரை சுமார் 34 ஆயிரம் பாலஸ்தீனியர்கள்
  • உயிரிழந்துள்ளனர். போர் நிறுத்த பேச்சு வார்த்தைகள்
  • எகிப்து தலைநகர் கெய்ரோவில் நடந்து வரும் நிலையில், தெற்கு காசாவில் உள்ள ராஃபா எல்லைப் பகுதியை இஸ்ரேல் ராணுவம் கைபற்றியுள்ளது. இஸ்ரேலில் இருந்து அல் ஜசீரா தொலைகாட்சி வெளியேற்றப்பட்டுள்ளது. திங்கள் அன்று போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஹமாஸ் இயக்கம்
  • ஒப்புதல் அளித்தது. ஆனால் இதை இஸ்ரேல் பிரதமர்
  • நெதன்யாஹு நிராகரித்து விட்டார். ஹமாஸ் இயக்கத்தின் கோரிக்கைகளை ஏற்க முடியாது என்றும், காசா பகுதியின் இருந்து இஸ்ரேல் ராணுவத்தை வாபஸ் பெற முடியாது
  • என்றும் கூறியுள்ளார். ஹமாஸ் வசம் உள்ள இஸ்ரேலிய பிணைக் கைதிகளின் உறவினர்கள், நெதன்யாஹுவிற்கு எதிராக ஆர்பாட்டம் நடத்தினர். போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டு, பிணைக் கைதிகளை மீட்க வகை
  • செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்