சர்வதேச சமையல் - Moambe chicken...நாவூர வைக்கும் சன்டே ஸ்பெஷல்...

Update: 2023-08-06 10:52 GMT

சர்வதேச சமையல்ல இன்னைக்கு நாம சமைக்க போற ரெசிபி...

மத்திய ஆப்பிரிக்காவுல இருக்குற அங்கோலா (Angola ) நாட்டின் தேசிய உணவான Moambe chicken...

நம்ம ஊரு இட்லி, பரோட்டா மாதிரி அங்கோலா நாட்டுல எங்க போனாலும் கிடைக்குற உணவு தான் Moambe chicken... கோழி இருந்தா கோழிய அடிச்சு சமைப்பாங்களாம்... கோழி கிடைக்கலனா வாத்த அடிச்சு Moambe Duck-கா சமைச்சுடுவாங்க இந்த ஊரு மக்கள்.... பட் நமக்கு வாத்து தின்னு பழக்கம் இல்லாததுனால... வழக்கம்போல நாம கோழிய வச்சே ட்ரை பண்ணுவோம்...

Moambe chicken சமைக்க நமக்கு தேவையான பொருள்... நாலு பெரிய துண்டு சிக்கன், வெங்காயம், வெங்காய தாள், இஞ்சி, பூண்டு, டொமேட்டோ சாஸ், அரைச்ச தக்காளி, உப்பு, PEPPER FLAKES, பீனட் பட்டர் ... அவ்வளவுதான்... இனி சமையலை ஸ்டார்ட் பண்ணிடலாம்...

முதல்ல அடுப்புல கடாய வச்சு 2 ஸ்பூன் எண்ணெயை ஊத்தி லைட்டா கொதிக்க விடணும். அப்புறம் நறுக்கி வச்ச கறி துண்டை அதுல போட்டு பொன் நிறமா பொறிச்சு எடுத்துக்கணும்... அப்புறம் அதே கடாய்ல நறுக்கிய வெங்காயத்தை போட்டு ஒரு 5 நிமிஷம் வதக்கணும். அப்புறம் இஞ்சி-பூண்டு விழுது, அரைச்ச தக்காளி, கூடவே தக்காளி சாஸ், பொடியா நறுக்குன வெங்காய தாள், பொடியா நறுக்கின இஞ்சி 1 ஸ்பூன், அதே அளவு PEPPER FLAKES, தேவையான அளவு உப்பு... இது எல்லாத்தையும் போட்டு ஒரு கப் தண்ணி கலந்து மசாலா நல்லா மிக்ஸ் ஆகுற வரை கிண்டி விடணும்.பொரிச்சு வச்ச பொன்நிற சிக்கன் துண்டை ஒவ்வொண்ணா இந்த மசாலா குள்ள இறக்கணும். அப்புறம் ஒரு 45 நிமிஷம்... மிதமான சூட்டுல கொதிக்க விடணும்.இந்த சமையல்ல ஹைலைட்டே கடைசியில சேர்க்குற பீனட் பட்டர் தான். அரை கப் பீனட் பட்டரை எடுத்து கடாய்ல இருந்து கொஞ்சம் மசாலாவை அதுல கலந்து அதை அப்படியே மொத்த சிக்கம் மேலயும் ஊத்தி மறுபடியும் ஒரு 20 நிமிஷம் கொதிக்க விட்டு எடுத்தா Moambe chicken ரெடி!இதுல இருந்து கறித் துண்டை தனியா ஒரு தட்டுல எடுத்து வச்சு... மசாலாவ மேலாக்க ஊத்தி... கடைசியா கறிவேப்பிலைய பரபரனு தூவி விட்டா, இந்த Moambe chicken-னோட டேஸ்ட்டு நம்மளை சொர்க்கத்துக்கே கூட்டிட்டுப் போகுமாம்.சரி, தூர நின்னு வேடிக்கை பாக்காம... சாப்பாட்டுல போட்டு பினைஞ்சு அடிக்க ஆரம்பிக்கலாம் வாங்க...



Tags:    

மேலும் செய்திகள்