பாகிஸ்தானில் இருந்து பிரதமர் மோடிக்கு வந்த மெசேஜ்

Update: 2024-08-30 14:56 GMT

இந்தியா, சீனா, ஈரான் உள்ளிட்ட 9 நாடுகள் இடம்பெற்றுள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு இந்த ஆண்டு அக்டோபரில் இஸ்லாமாபாத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் மும்தாஜ் ஸாஹ்ரா பலோச், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் இடம்பெற்றுள்ள அனைத்து தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும், அதில் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் முறைப்படி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு அக்டோபர் 15, 16ம் தேதிகளில் நடைபெறக்கூடும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்