இந்தியாவில் இறங்கிய இஸ்ரேல் "டைம் மெஷின்"... முதியவர்கள் உள்ளே புகுந்தால் 25 வயது இளமையா?
இந்தியாவில் இறங்கிய இஸ்ரேல் "டைம் மெஷின்"... முதியவர்கள் உள்ளே புகுந்தால் 25 வயது இளமையா? நாடு முழுவதும் பறந்த அலர்ட்
கிட்வாய் நகர் பகுதியில் இவர்கள் சிகிச்சை மையத்தைத் திறந்து 90 ஆயிரம் ரூபாய்க்கு ஆக்சிஜன் தெரபி வழங்கியதோடு மற்ற வாடிக்கையாளர்களை அழைத்து வரும் நபர்களுக்கு இளமை திரும்ப வைக்கும் டைம் மெஷின் என்றுகூறி போலியான டைம் மெஷினைத் தந்து ஒரு தில்லாலங்கடி தம்பதி 35 கோடி மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் 25 வயதுடையவர்களாக மாற்றும் இஸ்ரேலில் தயாரிக்கப்பட்ட டைம் மெஷின் என்றுகூறி விற்பனை செய்து 35 கோடி ரூபாயை ஏமாற்றியுள்ளனர் அத்தம்பதி... 20க்கும் மேற்பட்டோருக்கு இந்த டைம் மெஷினை விற்பனை செய்து ராஜூவ் தூபே மற்றும் ராஷ்மி ஆகிய தம்பதி இந்த ஏமாற்றுச் செயலில் ஈடுபட்டுள்ளனர். டைம் மெஷினுக்குள் சென்றால் ஆக்ஸிஜன் தெரப்பி வழங்கப்படும் எனவும், அந்த தெரபி மூலம் இளமை திரும்பும் எனவும் பலருக்கும் விபூதி அடித்துள்ளனர் ராஜூவ் தூபேவும், ராஷ்மியும்...இது தொடர்பாக பாதிக்கப்பட்ட 3 பேர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், மோசடி செய்த தம்பதி வெளிநாட்டிற்கு தப்பாமல் இருக்க விமான நிலையங்களை அலெர்ட் செய்துள்ளனர்.
தள்ளுபடியெல்லாம் தந்து மோசடி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.