ஹமாஸ் தலைவருக்கு குறி.. 71 மக்கள் கோர பலி...கலவர பூமியான அதிர்ச்சி காட்சிகள்
தெற்கு காசாவின் கான் யூனிஸ் பகுதியில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் 71 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். 280க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இடம் பெயர்ந்த மக்கள் தற்காலிகமாக வசித்து வந்து வந்த பகுதியில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் டெண்ட் குடியிருப்புகள் உள்ளிட்ட பொருட்கள் தீயில் எரிந்து கருகின. ஹமாஸ் அமைப்பை
சேர்நத முக்கிய நபரை குறி வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்த நிலையில் அதில் முகமது டெய்ஃப் என ஹமாஸ் தளபதி கொல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இஸ்ரேல் ராணுவ தாக்குதலால் கான் யூனிஸ் பகுதி கலவர பூமியாக காட்சி அளிக்கிறது.