அரை நூற்றாண்டுகளுக்கு பிறகு சகாராவில் வெள்ளம்

Update: 2024-10-13 10:54 GMT

மணல் திட்டுகள்... பேரிச்சை மரங்களுக்கு மத்தியில் நீர்நிரம்பி ரம்மியமாக காட்சியக்கிறது சகாரா பாலைவனம்...

என்னது சகாரா பாலைவனத்திலையா...? என கேட்டால் ஆம்.. சகாராவிலும் இப்போது சாரல் தூவ தொடங்கிவிடட்து...

சகாரா வெள்ளக் காட்சி, பின்னணியில் சஹானா சாரல் தூவுதோ

இப்படியே போனால் சகாராவும் பூக்களில் நிரம்பிவிடும்போல...

ஆம்... தென்கிழக்கு மொராக்கோவிலிருக்கும் மிக வறண்ட சகாராவில் மழை பெய்வதே அரிது.

ஆனால்.. இப்போது மழை பெய்தது மட்டுமல்லாமல் வெள்ளமும் ஏற்பட்டிருக்கிறது. வெள்ள நீர்தான் சீனிபோலிருக்கும் மணலில் நீல பளிங்கு போல் காட்சியளிக்கிறது.

ஆண்டுக்கு 250 மில்லிமீட்டருக்கும் குறைவாகவே மழை பெய்யும் இடத்தில் செப்டம்பர் மாதத்தில் 2 நாட்களில் கனமழை கொட்டியிருக்கிறது என தெரிவித்துள்ளது மொராக்கோ அரசு....

அதிலும் பாலைவனத்தில் டாடா பகுதியில் ஒரே நாளில் 100 மில்லிமீட்டர் மழை பதிவாகியிருக்கிறது.

இப்படி 50 ஆண்டுகளுக்கு பிறகு குறுகிய காலத்தில் இவ்வளவு அதிக மழையை கண்ட பாலைவனம் வெள்ளத்தில் ரம்மியமாக காட்சியளிக்கிறது...

சகாரா தடாகம் கண்களை கொள்ளைக் கொண்டாலும், காலநிலை மாற்றத்தால் தூண்டப்பட்ட வானிலை மாற்றங்கள் விளைவுதான் இந்த அதிகனமழை எனவும் எச்சரிக்கிறார்கள் வல்லுநர்கள்...

Tags:    

மேலும் செய்திகள்