அமெரிக்க அமைச்சராகும் உலகின் நம்பர் 1 கோடீஸ்வரரான எலான் மஸ்க்..?

Update: 2024-08-20 09:14 GMT

அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால், எலான் மஸ்க்கிற்கு அமைச்சர் பதவி அளிக்கப் போவதாக டிரம்ப் கூறியுள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிடும் டிரம்ப்பிற்கு, உலகின் நம்பர் ஒன் பணக்காரரான எலான் மஸ்க் முழு ஆதரவை தெரிவித்துள்ளார். இந்நிலையில் அதிபர் தேர்தலில் தான் வெற்றி பெற்றால், எலான் மஸ்க்கிற்கு அமைச்சர் பதவி அல்லது ஆலோசகர் பதவி அளிக்கப் போவதாக டிரம்ப் கூறியுள்ளார்.அதே சமயத்தில் மின்சார கார்களுக்கு அளிக்கப்படும் 7 ஆயிரத்து 500 டாலர் வரிச் சலுகையை ரத்து செய்யப் போவதாக டிரம்ப் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மின்சார கார்கள் விலை மிக அதிகம் என்றும், ரீச்சார்ஜ் செய்யாமல் அவை அதிக தூரம் செல்லாது என்று கூறியுள்ளார்.

சீன உதிரி பாகங்களை அதிக அளவில் கொண்டுள்ள மின்சார கார்கள், அமெரிக்க ஆட்டோமொபைல் துறையை அழித்து வருவதாக கூறினார்.எலான் மஸ்க், உலகின் முன்னணி மின்சார கார் உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவை நிறுவி, நடத்தி வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்