வட ஆப்பிரிக்க நாடான மொராக்கோவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் 300 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...மாரகேஷ் பகுதியில் 18.5 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.8ஆகப் பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் அறிவித்துள்ளது... யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமான இங்கு பல கட்டடங்கள் நிலநடுக்கத்தால் உருக்குலைந்து போயின... மசூதிகள் இடிந்து வாகனங்கள் மீது விழுந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தின... இடிபாடுகளில் சிக்கி 300 பேர் மரணமடைந்த நிலையில், படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்...