பாகிஸ்தானில் இன்று காலை நில நடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 5.2ஆக பதிவானதாக, தேசிய புவிவியல் ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதனால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து தகவல் வெளியாகவில்லை. தஜிகிஸ்தான், அப்கானிஸ்தானிலும் நில நடுக்கம் உணரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.