"டிரம்பை வீழ்த்த சரியான ஆள்..." கை காட்டிய பைடன்... ஒபாமா முடிவை உற்று நோக்கும் இந்தியர்கள்

Update: 2024-07-22 07:56 GMT

"டிரம்பை வீழ்த்த சரியான ஆள்..." கை காட்டிய பைடன்... ஒபாமா முடிவை உற்று நோக்கும் இந்தியர்கள்

அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து தாம் விலகுவதாக தற்போதைய அதிபர் ஜோ பைடன் திடீரென அறிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடைபெற உள்ளது. இதில் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடனும் , குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பும் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது. இதையொட்டி இருவரும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து தாம் விலகுவதாக ஜோ பைடன் திடீரென அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தமது எக்ஸ் தள பதிவில் அமெரிக்க அதிபர் தேர்தலில் தாம் போட்டியிடுவதில்ல்லை என முடிவு செய்துள்ளதாகவும், இதனை தமது ஜனநாயக கட்சியினர் ஏற்று கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். சில மாதங்களில் முடிவடையும் தமது எஞ்சிய பதவி காலத்தில் அமெரிக்க அதிபரின் கடமைகளை திறம்பட செயல்படுத்துவதில்

முழு ஆற்றலுடன் கவனம் செலுத்த உள்ளதாக ஜோபைடன் தெரிவித்துள்ளார். கடந்த 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற

தேர்தலில் தாம் எடுத்த முதல் முடிவு துணை அதிபர் பதவிக்கு கமலா ஹாரீஸ் போட்டியிட வேண்டும் என்பதே என்றும் அது மிகச்சிறந்த முடிவு என்றும் ஜோபைடன் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் தேர்தலிலும் கமலா ஹாரீசுக்கு தாம்

முழு ஆதரவு அளிக்க தாம் விரும்புவதாகவும், கமலா

ஹாரீசை ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் பதவிக்கான

வேட்பாளராக அறிவிக்கட வேண்டும் என்றும் பைடன் தெரிவித்துள்ளார். முன்னாள் அதிபர் டிரம்பை வீழ்த்த

இதுவே சிறந்த தருணம் என்றும், ஜனநாயக கட்சியினர் அனைவரும் ஒன்றிணைந்து இதனை செய்து காட்டுவோம் என்றும் அப்பதிவில் ஜோபைடன் தெரிவித்துள்ளார்.


Tags:    

மேலும் செய்திகள்