ட்ரம்ப் உயிரை குடிக்க 12 மணிநேரம் காத்திருந்த எமன்-கடைசி நொடியில் பூரி ஜெகன்நாத் நிகழ்த்திய அதிசயம்?

Update: 2024-09-17 11:40 GMT

ட்ரம்ப் உயிரை குடிக்க 12 மணிநேரம் காத்திருந்த எமன்... உலகையே அதிரவிட்ட 2வது படுகொலை முயற்சி - கடைசி நொடியில் பூரி ஜெகன்நாத் நிகழ்த்திய அதிசயம்?

முன்னாள் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை 2 முறை படுகொலை செய்ய முயன்ற சம்பவம் உலக நாடுகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது... அமெரிக்க அதிபர் தேர்தலில் இது எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்தும்?...பார்க்கலாம் இந்த செய்தித் தொகுப்பில்...

2 மாதங்களில் ட்ரம்ப் 2 முறை படுகொலை முயற்சி...அமெரிக்காவில் அதிபராக இருந்தவர்களுக்குக் கூட பாதுகாப்பில்லையென்றால் சாமானியர்கள் நிலைமை?...

ஜூலை 13ல் பென்சில்வேனியா பிரச்சாரக் கூட்டத்தில் முதல் படுகொலை முயற்சி...

தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனது என்பதைப் போல்...ட்ரம்ப் காதை மட்டும் பதம் பார்த்துச் சென்றது துப்பாக்கி குண்டு...

துப்பாக்கிச் சூடு நடத்தியவர் சுட்டுக் கொல்லப்பட்டார்...

சரியாக 2 மாதங்கள் இடைவெளி...இதோ கடந்த 15ம் தேதி 2வது படுகொலை முயற்சி...

ட்ரம்ப் புளோரிடாவின் வெஸ்ட் பாம் பீச் நகரில் உள்ள கோல்ஃப் மைதானத்தில் கோல்ஃப் விளையாடிக் கொண்டிருந்த போது ஏகே 47 ரக துப்பாக்கியால் சுட்டுக் கொல்ல முயற்சி...

நல்வாய்ப்பாக ட்ரம்ப்பிற்கு எதுவும் ஆகவில்லை... போலீஸ் வளையத்துக்குள் குற்றவாளி...

Ryan Wesley என்ற 58 வயது நபர் கைது செய்யப்பட்ட நிலையில்...படுகொலை முயற்சிக்காக கிட்டத்தட்ட 12 மணிநேரம் Wesley கோல்ஃப் மைதானம் அருகிலேயே காத்திருந்ததாகவும்...

நடக்கும் நிகழ்வுகள் அனைத்தையும் பதிவு செய்ய அவர் கேமராவை எடுத்து வந்ததாகவும் வெளியாகியுள்ள தகவல் திடுக்கிடச் செய்கிறது...

ட்ரம்ப் மீதான படுகொலை முயற்சிகள்...அமெரிக்க அரசியல் வன்முறையை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன...

பிரச்சாரம் செய்யும்போதும் படுகொலை முயற்சி...விளையாடிக் கொண்டிருக்கும்போதும் படுகொலை முயற்சி...

இப்போதே இந்த நிலைமை என்றால் தேர்தல் சமயத்தில் பாதுகாப்பு நிலைமை எப்படியிருக்கும் என்பது கேள்விக்குறியே...

ட்ரம்ப் இப்போது அதிபர் இல்லை...அதிபர் வேட்பாளர் மட்டுமே என்பதால், அதற்குத் தகுந்த பாதுகாப்பைத் தான் சீக்ரெட் சர்வீசால் வழங்க முடியும்...

ஏற்கனவே பல வழக்குகளில் சிக்கி சட்டப்போராட்டங்களை எதிர்கொண்டு வரும் ட்ரம்ப்புக்கு அரசியல் வன்முறை கூடுதல் சவாலே...

அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் தன் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளார் ட்ரம்ப்...

இது ஒருபுறமென்றால்...இந்த 2வது படுகொலை முயற்சியால் ட்ரம்ப்புக்கான ஆதரவு அதிகரிக்கக் கூடும் என்றே பார்க்கப்படுகிறது...

இதற்கு முதல் படுகொலை முயற்சிக்குப் பின் நடந்தவையே சாட்சி...

கடந்த சில நாள்களுக்கு முன் ட்ரம்ப்புக்கும், கமலா ஹாரிசுக்கும் நடந்த அதிபர் தேர்தலுக்கான விவாதத்தில் கமலா ட்ரம்ப்பை விட சிறப்பாக வாதிட்டதாக பேசப்பட்டது...

அதன்பிறகு கமலாவுக்கான ஆதரவும் கணிசமாக அதிகரித்தது...

ஆனால், ட்ரம்ப் மீதான இந்த 2வது படுகொலை முயற்சி அப்படியே நிலைமையை மாற்றி விட்டது...

ஏனெனில் முதல் படுகொலை முயற்சி நிகழ்ந்த போது... ட்ரம்ப் உயிரைக் காத்தது கடவுள் பூரி ஜெகன்நாதர் தான் என்று பேசப்பட்டது...

பல ஆண்டுகளுக்கு முன்பு நியூயார்க்கில் பூரி ஜெகன்நாதர் தேரோட்டம் நடைபெற ட்ரம்ப் உதவியது தான் காரணம் என கூறப்பட்டது...

இதோ...2வது படுகொலை முயற்சியில் ஒரு சிறு கீறல் கூட இன்றி தப்பியுள்ளார் ட்ரம்ப்...

ட்ரம்ப் உயிரைக் காப்பது கடவுள் தான் என்று பலரும் பேசி வருகின்றனர்...

Tags:    

மேலும் செய்திகள்