அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், நீதிமன்றம் விதித்த அபராதத்தை கட்ட தவறினால், அவரது வானளாவ கட்டடம் உள்ளிட்ட சொத்துக்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என நியூயார்க் மாநில அட்டர்னி ஜெனரல் லெட்டிடியா ஜேம்ஸ் தெரிவித்துள்ளார். டொனால்ட் ட்ரம்ப், தனது வணிக நிறுவனம், மகன்கள், ஊழியர்களின் சொத்து மதிப்புகள் மற்றும் நிதி விவரங்கள் குறித்து தவறான தகவல்கள் அளித்து வந்ததாக குற்றம்சாட்டப்பட்டு வழக்கு விசாரணை நடைபெற்றது வந்தது. இதில் அவருக்கு 2 ஆயிரத்து, 947 கோடி ரூபாய் அபாதம் விதித்து தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து, ட்ரம்ப் நீதிமன்றம் செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த அபராதத்தை செலுத்த தவறினால், ட்ரம்பின் வானளாவ கட்டடங்கள் உள்பட அனைத்தும் சொத்துக்களும் பறிமுதல் செய்யய நடவடிக்கை எடுக்கப்படும் என யூயார்க் மாநில அட்டர்னி ஜெனரல் லெட்டிடியா ஜேம்ஸ் தெரிவித்துள்ளார்.