கடந்த 1993ம் ஆண்டுமுதல் 2001ம் ஆண்டு வரை அமெரிக்க அதிபராக பதவி வகித்த பில் கிளிண்டன், சிகாகோவில் நடைபெற்ற ஜனநாயகக் கட்சியின் தேசிய மாநாட்டில் உரையாற்றினார். அப்போது, 2 நாட்களுக்கு முன், தனக்கு 78 வயது நிறைவடைந்ததாகவும், தனது குடும்பத்தில் தான் மட்டுமே மூத்தவர்... இருந்தபோதிலும் டொனால்ட் டிரம்ப்பைவிட தான் இன்னமும் இளமையுடன் இருப்பதாகவும் தெரிவித்தார். இத்தேர்தலில் யாரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதில் அமெரிக்கர்கள் தெளிவாக இருப்பதாகவும், எனினும், எதிராளியை கட்சியினர் குறைத்து மதிப்பிடக்கூடாது என்றும் அறிவுறுத்தினார். வெள்ளை மாளிகைக்குள் அதிபராக கமலா ஹாரிஸ் நுழைய வேண்டுமென தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய பில் கிளிண்டன், அங்குள்ள மெக்டொனால்ட் ரெஸ்டாரன்டிற்கு அடிக்கடி சென்று தனது சாதனையை முறியடிக்க வேண்டுமென நகைச்சுவையுடன் குறிப்பிட்டார்.