ஒலிம்பிக் மகளிர் வில்வித்தை போட்டியில் தொடர்ச்சியாக 10வது முறை தங்கப்பதக்கம் வென்று தென் கொரியா வரலாறு படைத்துள்ளது.மகளிர் அணிகள் பிரிவு வில்வித்தை இறுதிப்போட்டியில் சீனா மற்றும் தென் கொரியா அணிகள் மோதின. பரபரப்பாக நடைபெற்ற இறுதிப்போட்டியில் முதல் 2 செட்களை தென் கொரியாவும் அடுத்த 2 செட்களை சீனாவும் வென்றன. இதனையடுத்து வெற்றியாளரைத் தீர்மானிக்க shoot off நடத்தப்பட்ட நிலையில் அதில் தென் கொரியா வெற்றி பெற்று, தங்கப்பதக்கத்தை வசப்படுத்தியது. கடந்த 1988ம் ஆண்டு முதல் ஒலிம்பிக் மகளிர் வில்வித்தை அணிகள் பிரிவு போட்டியில் தங்கப்பதக்கத்தை வென்று வரும் தென் கொரியா, தற்போது 10வது முறையாக தொடர்ந்து தங்கம் வென்று, வில்வித்தையில் தாங்கள் அசைக்க முடியாதவர்கள் என நிரூபித்து உள்ளது.