சீனாவில் நள்ளிரவில் கேட்ட பெரும் சத்தம்..116 பேரின் உயிரை காவு வாங்கிய கொடூரம்..பீதியில் பொதுமக்கள்
கன்சு மாகாணத்தின் ஜிஷிஷான் பகுதியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.2ஆகப் பதிவாகியுள்ளது... இந்த நிலநடுக்கம் கன்சு மாகாணத்தின் தலைநகரான லான்ஜோவிலிருந்து தென்மேற்கே சுமார் 100 கிலோமீட்டர் தொலைவில் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது... வீடுகள், கட்டடங்கள் இடிந்து சேதம் அடைந்தன.. மக்கள் அலறியடித்துக் கொண்டு ஓடி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர்... இடிபாடுகளில் சிக்கி 116 பேர் பலியான நிலையில், நீர், மின்சாரம் மற்றும் போக்குவரத்து இணைப்புகள் துண்டிக்கப்பட்டன... சீன அதிபர் ஜி ஜின்பிங், மீட்பு நடவடிக்கைகளை முழுவீச்சில் முடுக்கிவிட உத்தரவிட்டுள்ளார்.