பள்ளிக்கு வெளியே நின்றிருந்த குழந்தைகள்.. கத்தியால் குத்திய மிருகம்.. டப்லினில் அதிர வைத்த கொடூரம்
அயர்லாந்து தலைநகர் டப்லினில் பள்ளிக்கு வெளியே கத்திக்குத்து தாக்குதலுக்கு ஆளான 3 குழந்தைகள் உட்பட 5 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...
சந்தேகத்தின் பேரில் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளதாக அந்நாட்டு பிரதமர் லியோ வரத்கர் தெரிவித்துள்ளார்... டப்ளின் நகரின் பார்னெல் சதுக்கத்தில் இச்சம்பவம் நிகழ்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது... இச்சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்... இந்நிலையில், அல்ஜீரியாவைச் சேர்ந்தவர் இந்தக் கத்திக் குத்து சம்பவத்தில் ஈடுபட்டதாக இணையத்தில் தகவல்கள் பரவிய நிலையில், டப்ளின் வீதிகளில் புலம்பெயர்வுக்கு எதிரானவர்கள் போராட்டத்தில் குதித்தனர்... வாகனங்கள் எரிக்கப்பட்டன... கடைகள் சூறையாடப்பட்டு கலவர பூமியாகக் காட்சியளித்தது..