மிகப்பிரபலமான 700க்கும் மேற்பட்ட ஹாலிவுட் நட்சத்திரங்கள் இஸ்ரேலுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்துள்ளனர். யூதர்களான Gal Gadot, நடிகரும் பட தயாரிப்பாளருமான மைக்கேல் டக்ளஸ், ஜெர்ரி சீன்ஃபீல்ட் உள்ளிட்ட 700க்கும் அதிகமானோர் இஸ்ரேல் மீதான ஹமாசின் தாக்குதலைக் கண்டித்தும், உடனடியாக பணயக் கைதிகளை விடுவிக்கக் கோரியும், தனியார் நிறுவனம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட கடிதத்தில் கையெழுத்திட்டனர்.