இலங்கையில் மாணவர் போராட்டத்தில் கண்ணீர் குண்டு வீசிய ராணுவம்...பயத்தில் தெறித்து ஓடிய மாணவர்கள்
இலங்கை அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பல்கலைக்கழக மாணவர்கள் மீது அந்நாட்டு போலீசார் கண்ணீர் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியால் பரபரப்பு ஏற்பட்டது. இலங்கையில் உள்ள பல்கலைக்கழகங்களை காப்பாற்ற ஒன்றுபடுங்கள் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கொழும்பு நகரில் மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, போலீசார் மற்றும் ராணுவ வீரர்கள் மாணவர்கள் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்ததுடன் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். மேலும் மாணவர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் அப்போது தாக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.