ஆம் ஆத்மி எம்எல்ஏவை காலணியால் தாக்கிய பெண்.. பரபரப்பை கிளப்பிய வீடியோ
துவாரகாவின் மதியாலா பகுதியில் ஆம் ஆத்மி எம்எல்ஏ குலாப் சிங் யாதவை பெண் ஒருவர் காலணியால் தாக்கியுள்ளார். தனது பகுதியில் சாலைகள் மோசமாக இருப்பதாகவும், பள்ளிகளுக்கு வெளியே தண்ணீர் தேங்கி இருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், இதை டெல்லி பாஜகவினர் எக்ஸ் தளத்தில் விமர்சனம் செய்து வருகின்றனர். டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் அவருடைய எம்எல்ஏக்கள் மீது பொதுமக்கள் அதிருப்தியில் இருக்கிறார்கள் என்றார்கள், அதனால் பொதுமக்கள் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள் என்றும் அவர்கள் விமர்சனம் செய்துள்ளனர். கடந்த 10 ஆண்டுகளில் ஆம் ஆத்மி கட்சியினர் ஏதாவது பணியை செய்திருந்தால், இதுபோன்ற தாக்குதலை சந்திக்கும் நிலை ஏற்பட்டிருக்காது என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.